day, 00 month 0000

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் குட்டி ஸ்டோரி கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்திய விஜய்

விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த இசை வெளீயீட்டு விழாவில் ஒரு குட்டிக் கதை கூறியுள்ளார். 

அதில் அவர் கூறியதாவது: 

ஒரு குடும்பம். அதில் அம்மா, அப்பா, அண்ணா, தங்கச்சி. அப்பா தினமும் வேலைக்கு போய்ட்டு வரும்போது சாக்லெட் வாங்கிட்டு வருவார். ரெண்டு பசங்களுக்கும் தருவார். இதில் தங்கச்சி பாப்பா சாக்லெட்டை அப்போதே தின்றுவிடும். அண்ணன் அடுத்த நாளைக்கு பள்ளிக்கு செல்லும் போது சாப்பிடலாம் என ஒரு இடத்தில் மறைத்து வைப்பார். 

அண்ணன் போனதும் தங்கச்சி பாப்பா மறைத்து வைத்திருந்த சாக்லெட்டை எடுத்து தின்றுவிடும். இது தினமும் நடக்கும். ஒருநாள் தங்கச்சி பாப்பா அண்ணனிடம், "அன்பு அன்புனு சொல்றாங்களே அன்புனா என்ன அண்ணா ?" என கேட்கும். அப்போது அந்த அண்ணா, "நீ உன்னோட சாக்லெட்டையும் சாப்டுற்ற, எனக்கு வெச்ச சாக்லெட்டையும் சாப்டுற்ற. 

அது தெரிஞ்சும் தினமும் அங்கயே சாக்லெட் வெக்குறேன்ல அதுதான்மா அன்பு" என கூறுவார். அன்புதான் உலகத்தை வெல்லும் ஆயுதம் என்றார். விஜய் இவ்வாறு கூறியதும் நேரு விளையாட்டு அரங்கேமே ரசிகர்களின் கரவொலியால் அதிர்ந்தது.

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்