day, 00 month 0000

நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு: பிரான்ஸின் பொதுத்துறை முடங்கும் அபாயம்

சம்பளம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும் பாடசாலை ஊழியர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட பொதுத்துறை ஊழியர்கள் நாளைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

பிரான்ஸ் ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு, பிரான்ஸ் நிர்வாக மற்றும் பொது கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளன.

அத்துடன், தொழில் வாய்ப்பை மேம்படுத்துவதற்கும் சம்பள அதிகரிப்பை மேற்கொள்பவதற்கான பொதுவான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் விரைவான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

இதன்படி, பிரான்ஸ் முழுவதும் உள்ள பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அத்துடன், பிரான்ஸின் லோயர்-அட்லாண்டிக் போன்ற பகுதிகளில் இவை வார இறுதி வரை மூடப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, பாடசாலை சிற்றுண்டிசாலைகளில் மத்திய உணவு வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட்டிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில், நாளைய தினம் பிரான்ஸின் அனைத்து துறைகளும் முடங்கும் அபாயம் காணப்படுகின்றது. ஆகவே, பொதுமக்கள் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகின்றனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்