day, 00 month 0000

அம்பானி வீட்டு திருமணத்தில் நடனமாட பொலிவுட்டின் மாஸ் நட்சத்திரங்கள் பணம் பெற்றார்களா

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் நடனமாட பிரபலங்கள் பணம் பெற்றதாக இணையத்தில் வதந்திகள் பரவி வருகிறது.

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12ஆம் திகதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், திருமணத்திற்கான முந்தைய கொண்டாட்டம் ஜாம்நகரில் மார்ச் முதலாம் திகதியில் இருந்து மார்ச் மூன்றாம் திகதி வரை கோலாகலமாக நடைபெற்றது.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொலிவுட்டின் மாஸ் நட்சத்திரங்களான ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் மூன்று பேரும் சேர்ந்து ஆர்ஆர்ஆர் படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினார்.

அப்போது, ஷாருக்கான் இந்த படத்தின் ஹீரோவே இங்கு தான் இருக்கிறார் என்று ராம் சரணை அழைத்தார்.

இதையடுத்து, மூன்று கானுடன் சேர்ந்து ராம் சரண் நடனமாடினார்.

பணம் பெற்றாரா?

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அம்பானி வீட்டு கல்யாணத்தில் நடனமாடுவதற்கு பொலிவுட் நடிகர்களான சல்மான்கான், அமீர்கான், ஷாருக்கான் மற்றும் ராம் சரண் ஆகியோர் பணம் பெற்றதாக புதிய சர்ச்சை கிளம்பியிருக்கின்றது.

நட்பு ரீதியிலாக ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று நிகழ்ச்சி கலைக்கட்டிய நிலையில் இப்படி ஒரு சர்ச்சை கிளம்பியது ரசிகர்களுக்கு சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா பிரபலங்கள் என்றாலே சர்ச்சைகள் உலாவுவது வழக்கம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்