நடிகர் விஜயின் 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தின் இயக்குநர் சித்திக் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
கல்லீரல் மற்றும் நிமோனியா நோய்களினால் பாதிக்கப்பட்டு அதற்காக சித்திக் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சூழவில் தான் அவருக்கு சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கேரளாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சித்தக் நேற்று இரவு தனது 69வது வயதில் காலமானார்.
இதேவேளை, இயக்குனர் சித்திக் தமிழில் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ், சாது மிரண்டா, மற்றும் காவலன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குநர் சித்திக் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.