நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தின் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக படக்குழு புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது.
ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் 10ம் திகதி திரையில் வெளியாகவுள்ளது.
அனிருத்தின் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திரைப்படத்தின் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.