பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது.
இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். பகாசூரன் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.
'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'பகாசூரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் இப்படத்தின் டீசர் வருகிற 28-ஆம் தேதி காலை 10.10 மணிக்கு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.