டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தை மையமாகக் கொண்டு தாம் திரைப்படமொன்றை இயக்கவுள்ளதாக வெளியான செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என பிரபல பொலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1997ல் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான 'டைட்டானிக்' படம் உலகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
111 வருடங்களுக்கு முன்பு டைட்டானிக் நீர்மூழ்கி கப்பலின் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகியிருந்தது.
இந்த நிலையில், டைட்டன் என்ற நீர்மூழ்கி கப்பலில் , டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை பார்க்க சென்று கோடீஸ்வரர்கள் உள்பட 5 பேர் அடங்கிய குழுவினர் உயிரிழந்தனர்.
இதற்கு இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் 'டைட்டன் விபத்தை நான் படமாக்க போவதாக வெளியான செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை' என்று மறுத்துள்ளார்.
இது குறித்து விளக்கமளித்துள்ள அவர், “பொதுவாக ஊடகங்களில் வரும் அவதூறான வதந்திகளுக்கு நான் பதிலளிப்பதில்லை. ஆனால் நான் இதற்கு பதிலளிக்க வேண்டிய தேவையுள்ளது. நான் ஓசன்கேட் தொடர்பான படம் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. எப்போதும் ஈடுபடவும் மாட்டேன்” என்று ஜேம்ஸ் கேமரூன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.