இயக்குனர் நவீன் இயக்கத்தில் ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் படம் "கடைசி தோட்டா".
இப்படத்தில் வனிதா விஜயகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ராதாரவி, ஸ்ரீகுமார், வையாபுரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் அதிரடியான காவல்துறை அதிகாரியாக நடிக்கும் வனிதா விஜயகுமார், சுருட்டு பிடிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
புகைப்பிடிப்பது போன்று நடிப்பதே தவறு, அதிலும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் ஏற்று இப்படி நடிப்பதை ஏற்கவே முடியாது என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.