நடிகர் ஷாருக்கானுக்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற படப்பிடிப்பில் திடீரென எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது.
அதில், நடிகர் ஷாருக்கானுக்கு மூக்கில் அடிபட்டுள்ளது.
உடனே, முதலுதவி சிகிச்சை அளித்தும் முக்கில் இருந்து இரத்தம் நிற்க வில்லை.
இதனால், ஷாருக்கானை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அறுவை சிகிச்சை பின்னர் நடிகர் ஷாருக்கான் மும்பைக்குத் திரும்பியுள்ளதாகவும், வீட்டில் தற்போது ஓய்வெடுத்து வருதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இதேவேளை, நடிகர் ஷாருக்கான் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.