// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஜனநாயக வழியில் போராடிய அப்பாவிகள் கைது - இலங்கையில் இராணுவ ஆட்சியே இடம்பெறுகின்றது

இலங்கையில் இராணுவ ஆட்சியே இடம்பெறுவதாகவும், பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் அராஜகம் குறையவில்லை எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும், சட்டத்தரணியுமான கே.சுகாஷ் தெரிவித்துள்ளார். 

பலாலில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிப்பது தொடர்பாக பலாலி பொலிஸ் நிலையத்திற்கு சென்று வந்த பின்னர் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஜனநாயக வழியில் போராடிய அப்பாவிகள் ஒரு சிலரை கைது செய்து பலாலி பொலிஸ் நிலையத்திலே தடுத்து வைத்துள்ளனர். அதனால், அவர்களை விடுவிப்பதற்கான முயற்சியில் நாம் இறங்கியுள்ளோம் எனவும் தெரிவித்தார். 

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், 

அந்த வகையில் பொலிஸ் பொறுப்பதிகாரியினை சந்திப்பதற்காக முயற்சி செய்திருந்தோம். ஆனால் எம்மை காக்க வைத்து திருப்பி அனுப்பியுள்ளனர். 

பொலிஸாரின் அராஜகமும், அடாவடியும் குறையவில்லை. ஆனாலும் அதற்கு நாம் அடிபணியவோ அல்லது சளைக்கவோ போவதன்று. மாறாக ஜனநாயக விரோத செயற்பாடுகளிற்கெதிராக குரல் கொடுப்போம். 

பலாலியில் இராணுவ பாதுகாப்பிற்கும், இராணுவ முகாம்களை தாண்டி பொலிஸ் நிலையத்தை அமைத்துள்ளனர். இங்கு வருவதற்கு கூட இராணுவத்தினரின் தலையீடு காணப்படுகின்றது. 

இதனால் இலங்கையில் இராணுவ ஆட்சி இடம்பெறுகின்றது என்பதனை இதன் மூலம் 

உறுதிப்படுத்தி கொள்ளலாம். 

ஜனநாயகத்திற்கான அடக்கு முறைக்கு எதிராகவும், மக்களின் வாழ்வாதாரத்தினை அழிகின்ற பொலிஸ் மற்றும் இராணுவத்தின் அடாவடிதத்திற்கு எதிராகவும் தொடர்ந்தும் குரல்கொடுப்போம்.- என்றார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்