day, 00 month 0000

ஜனாதிபதி பதவியை ஏற்குமாறு வற்புறுத்தியவர்களை அம்பலப்படுத்துவேன்: சபாநாயகர் மஹிந்த யாப்பா எச்சரிக்கை

அரசியலமைப்பினை மீறி ஜனாதிபதி பதவியைப் பொறுப்பேற்குமாறு தன்னை வற்புறுத்திய அரசியல்வாதிகள் குறித்து அம்பலப்படுத்தவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்றும், நாளை புதன் கிழமையும் விவாத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நாளை குறித்த நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

இந்நிலையில் குறித்த வாக்கெடுப்புக்கு முன்னதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

கடந்த அரகலய போராட்டத்தின் போது அரசியலமைப்பை மீறி தம்மை ஜனாதிபதி பதவிக்கு வற்புறுத்திய அரசியல்வாதிகளை அந்த அறிக்கை ஊடாக அம்பலப்படுத்தவுள்ளதாக சபாநாயகரின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.

நிலையியற் கட்டளையின் பிரகாரம் சபாநாயகர் விவாதத்தில் பங்கேற்க முடியாத காரணத்தினால் விசேட அறிக்கையொன்றை விடுத்து இந்த விடயங்களை வெளிப்படுத்த தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்