// print_r($new['title']); ?>
day, 00 month 0000

காவி உடையில் அரசியல் செய்யும் பிக்குமாரை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்

இனப்பிரச்சினை தொடர்பாக தொடர்ந்தும் பேசுவதை விடுத்து, செயலில் காட்டுங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிம்ம நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மேதின உரை தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளார்.

இனப் பிரச்சனை தொடர்பில் காத்திரமான முயற்சிகளை எடுத்த ஒருவராக ஜனாதிபதி திகழ்ந்தாலும் பதவியேற்ற பின்னர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

இனப்பிரச்சினை தீர்வுபற்றி, தமிழ் கட்சிகளை அழைத்துப் பேச முன்னதாக சிங்கள கட்சிகளை அழைத்து நாட்டின் உண்மை நிலைமை பற்றி ஜனாதிபதி பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினை தீர்வு என்றெல்லாம் கூறினாலும் மறுமுனை வடக்கு – கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தினால் காணி பறிபோகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

காவி உடையில் அரசியல் செய்யும் பிக்குமாரை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் இல்லாவிடின் வடக்கு கிழக்கில் விரைவில் கடும் பதற்ற நிலைமை உருவாகும் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

“மலைநாட்டில், வந்தவன், போனவன் எல்லாம் அடாத்தாக தோட்ட காணிகளை பிடிக்கிறான். ஆனால், 200 வருட வரலாற்றை தொட்டு விட்ட பெருந்தோட்ட மக்களுக்கு வாழ, பயிர் செய்ய காணி இல்லை.

மலையக தமிழருக்காக நான் குரல் கொடுத்தால், என்னை “தேயிலை கொழுந்து பறிக்க வந்தவன்”, “தோட்டகாட்டான்” என்கிறார்கள்.

இது மலைநாட்டு பெருந்தோட்ட பகுதிகளில் கடும் பதற்ற நிலைமையை மெதுவாக உருவாக்கி வருகிறது”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்