// print_r($new['title']); ?>
day, 00 month 0000

சென்னையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த ராஜஸ்தான்

சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் 2023 தொடர் கடந்த மாத இறுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் வெற்றி பெறும் முனைப்புடன் தீவிரமாக விளையாடிவருகின்றன. இன்று நடைபெறும் 37-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

தோனி தலைமையிலான சென்னை அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலின் முதல் உள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரராக ஜெய்ஸ்வாலும், பட்லரும் களமிறங்கினர். இருவரும் அதிரடியான தொடக்கத்தை இருவரும் கொடுத்த நிலையில், பட்லர் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சனும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் ஜெஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 43 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். ஹெட்மயரும் 8 ரன்களில் ஆட்டமிழக்க, துருவ் ஜூரெல் 34 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களைக் குவித்தது ராஜஸ்தான் அணி. சென்னை அணி சார்பில் மதிஷா பதிர்ரானா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ் கெய்க்வாட், டூவான் கான்வேவும் களமிறங்கினர். கான்வே 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ரஹானே 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, ஷிவம் துபே களமிறங்கினார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூத்ராஜ் 47 ரன்களில் சம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அம்பதி ராயுடு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 15 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்து சென்னை அணி தடுமாறியது. ஒருபுறம் ஷிவம் துபே மட்டும் அதிரடியாக ஆடி அணிக்கு நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து சிக்ஸர்களைப் பறக்கவிட்டு சென்னை அணி ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா அவருக்கு பாட்ன்ர்ஷிப் கொடுத்தார்.

இருவரும் இறுதிவரை வெற்றிக்காக போராடினர். இருப்பினும், 19-வது ஓவரை வீசிய ஜேசன் ஹோல்டரும், இறுதி ஓவரை வீசிய குல்தீப் யாதவ்வும் மிகச் சிறப்பாக பந்துவீசி ரன்னைக் கட்டுப்படுத்தினர். அதனால், சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் இரண்டிலும் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்