// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கிளிநொச்சியில், 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்சியாக நில ஆக்கிரமிப்புகள் நடைபெற்றுவருகின்றது

கிளிநொச்சி இரணைமடுக்  குளத்தின் தெற்குப் பகுதியில் யுத்தத்துக்கு பின்னரான 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்சியாக நில ஆக்கிரமிப்புகள்  நடைபெற்று வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி அலுவலகமாக அறிவகத்தில் இன்று(15-04-2023) மாவட்டத்தின் கட்சி அமைப்பாளர்கள் வேட்பாளர்கள் பிரதிநிதிகள் பொதுமக்களுடனான  சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியதின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதாவது கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பதிலும் நிலங்களை சுவீகரிப்பதிலுமே  இந்த அரசாங்கம் குறியாக இருந்த வருகின்றது.

குறிப்பாக பூனகரி  பிரதேசத்தில் அட்டை பண்ணைகள் இறால் பண்ணை என்ற பெயரில் காணிகள்  அபகரிக்கப்படுகின்றன.

என்றும் தெரிவித்த அவர் கிளிநொச்சியின் மண்டலாய் புல்லா வெளி ஆகிய பகுதிகளிலும் இரணைமடுக்குளத்தின் தெற்கு பகுதியிலும் சீன அரசாங்கத்துக்கு காணிகளை வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக வெளியான செய்தி தொடர்பில்; கேட்டபோது 2009 ஆம் ஆண்டு யுத்தத்திற்கு பின்னர் இரணைமடுவின் தெற்கு பகுதியை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருப்பதுடன் காடுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன குறிப்பாக அந்த பகுதியில் இருக்கின்ற கனிகளை ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றங்களை நிறுவுதல் அல்லது மறைமுகமாக காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

குறித்த பிரதேசங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் குறித்த பகுதிகளுக்கு சென்று உண்மைகளை அறிவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண முன்னை நாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கரைச்சி பிரதேச சபையினுடைய தவிசாளர் வேழமாலிகிதன்  பூநகரி பிரதேச சபையினுடைய தவிசாளர் சிறிறஞ்சன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினுடைய தவிசாளர்  சுப்ரமணியம் சுரேன்  மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது-


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்