// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இறுதி போட்டிக்குள் இந்தியா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 2 ஆட்டமிழப்புக்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

ஜூன் 7ம் திகதி லண்டனில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள இந்திய அணி அவுஸ்திரேலியா அணியுடன் தோற்றுவிட்டால், 3வது இடத்தில் உள்ள இலங்கைக்கு வாய்ப்பு அதிக வாய்ப்புக்கள் காணப்பட்டது.

அந்த அணி நியூசிலாந்துடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும். அதில் 2 போட்டிகளிலுமே வென்றால் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறும். ஒன்றில் தவறவிட்டால் கூட இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை காணப்பட்டது.

அந்தவகையில் நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி போராடி தோல்வியடைந்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 355 ஓட்டங்களை பெற , நியூசிலாந்து அணி 373 ஓட்டங்களை குவித்தது.

இதனால் 18 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை மீண்டும் 302 ஓட்டங்களை பெற்றது. இதனால் 284 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து டி20 ஆட்டம் போல் ஆடியது.

ஒருகட்டத்தில் அந்த அணி வெற்றி பெற 19 ஓவர்களில் 124 ஓட்டங்கள் தேவை என்ற சூழல் இருந்தது. அப்போது பொறுப்புடன் ஆடிய தலைவர் வில்லியம்சன் சீரான வேகத்தில் சதம் அடித்தார்.

அவருடன் சேர்ந்து டேரில் மிட்செல் 86 பந்துகளில் 81 ஓட்டங்களை விளாசினார். ஒருபுறம் 7 ஆட்டமிழப்புக்கள் சரிய, கடைசி 9 பந்துகளில் 12 ஓட்டங்கள் தேவை என்ற சூழலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

கடைசி பந்தில் ஒரு ஓட்டம் தேவை என்ற சூழலில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. கடைசி வரை தூண் போல நிலைத்து நின்று ஆடிய கேன் வில்லியம்சன் 194 பந்துகளில் 121 ஓட்டங்களை விளாசினார்.

இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - அவுஸ்திரேலிய அணிகள் மோதுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்