day, 00 month 0000

27 அடி உயரமான நடராஜர் சிலை கிளிநொச்சியில் திறந்துவைப்பு

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை இன்றைய தினம் (12) முற்பகல் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது. 

கரைச்சி பிரதேச சபையின் கீழ் உள்ள ஆனையிறவு பகுதியில் சுமார் 27 அடி உயரமான நடராஜர் சிலை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள அதிக உயரங்களை கொண்ட சிவன் சிலை, முருகன் சிலை, ஆஞ்சநேயர் சிலைகளுடன் கிளிநொச்சி நடராஜர் சிலையும் இணைந்து கொண்டமை வரலாற்று சிறப்பம்சமாகும்.

குறித்த நிகழ்வில் இந்து மத சிவாச்சாரியார்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா, பக்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்ட பின்னர், வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பிரயாணிகளும் நடராஜர் சிலையை பார்வையிட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்