day, 00 month 0000

இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது! அமெரிக்க பேராசிரியர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

தேவையான மாற்றங்கள் நிகழாத வரை இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது என அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கே  தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்கள் அவசியம். இல்லையெனில் கிடைக்கவுள்ள சர்வதேச நாணய நிதி பிணையெடுப்பு, இலங்கையின் பொருளாதாரத்துக்கு உதவுவது சந்தேகம் ஆகும். 

எனவே நீண்ட கால கடன் நிலைத்தன்மையை அடைவதற்கான முயற்சியில், இலங்கையில் நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்கள் தேவை.

இலங்கையில் உயர்மட்ட அரசியலில் உள்ள பெரும்பாலான ஆளுமைகள் பல ஆண்டுகளாக இருந்ததைப் போலவே இன்றும் உள்ளனர்.

கடந்த 1965ஆம் ஆண்டு முதல் 16 தடவைகளாக, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை பெற்றுக்கொண்டது. எனினும் அவை அனைத்தும் தோல்வியடைந்தன.

பிணையெடுப்பை எதிர்பார்ப்பது தற்காலிக நிவாரணத்தை மாத்திரமே கிடைக்கச் செய்யும். எனினும் நீண்ட காலத்திற்கு இது உதவாது என தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்