day, 00 month 0000

இராணுவத்தினருக்கு தண்டனை வழங்காதமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி

இலங்கையில் அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தண்டனை வழங்காதமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் ஏற்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறது என்பது குறித்த மீளாய்வுக்கூட்டத்திலேயே இதனை தெரிவித்துள்ளது.

இதேநேரம் இராணுவத்தின் பிடியில் இருந்த 92 வீதமான தனியார் காணிகள் முறையாக உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்பட்டமைக்கும் மனித உரிமைகள் மீளாய்வுக் குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் மீதான தலையீடு குறித்தும் மனித உரிமைகள் மீளாய்வுக் குழு கவலை வெளியிட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்