day, 00 month 0000

மட்டக்களப்பு காட்டில் மறைந்து வாழ்ந்திருந்த முன்னாள் போராளி மீட்பு

மட்டக்களப்பு - பட்டிப்பளைப் பிரதேசத்திற்கு உட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுதியிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா எனும் கிராமத்திற்கு அப்பாலுள்ள காட்டுப் பகுதியில் தூர்ந்து போன கொட்டகை ஒன்றில் வசித்து வந்த அவர் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 4 வருடங்களாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலையில் பாலா என்னும் நபரே நடுகாட்டில் இருந்து சடா முடியுடன் மீட்கப்பட்டுள்ளார்.

இவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபராக காணப்பட்டமையால் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் மற்றும் அவரது சக முன்னாள் போராளிகளும் அவரை தற்போது அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிகிச்கைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதி
தொடர்ந்து அவர் சிகிச்கைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் காட்டிலுள்ள பழங்களை உண்டு, நீராடாமல், தலைமுடி வெட்டாமல் வாழ்ந்து வந்துள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்