யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 20 பந்து பரிமாற்றங்களைக்கொண்ட ( T 20 ) Rev Fr Francis Joseph Chalange Trophy கிறிக்கெட் போட்டி செவ்வாய்கிழமை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.
யாழ்ப்பாணக் கல்லூரி அணித் தலைவராக A. நிகரிலனும் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணித்தலைவராக S.கீர்த்தனும் விளையாடினர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடியது 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 86 ஓட்டங்களை மட்டும் பெற்றுக்கொண்டது.
87ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய. சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி 10.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்று Rev Fr Francis Joseph T 20 வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றி சம்பியனானது.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்த M.சௌத்தியன் தெரிவானார்.
யாழ்ப்பாணக் கல்லூரிக்கு எதிரான பொன் அணிகள் போர், ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒரு நாள் போட்டி மற்றும் இருபது 20 ( T 20) Rev Fr Francis Joseph Chalange Trophy ஆகிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.