// print_r($new['title']); ?>
day, 00 month 0000

யாழ் மாநகர சபை கலையுமா? மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறுமா?

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்  ஆறு மேலதிக வாக்குகளால்  தோற்கடிக்கப்பட்டநிலையில் சபை கலையுமா? அல்லது மீண்டும் யாழ் மாநகர சபை முதல்வர் தெரிவு இடம்பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

யாழ் மாநகர சபை வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பாக யாழ் மாநகர ஆணையாளரால் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எடுக்கின்ற முடிவே இறுதியானது என தெரிகிறது.

இரண்டு முதல்வர்கள் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் தொடர்ச்சியாக தோற்கடிக்கப்பட்டால் சபை கலையும் என்கிற ஏற்பாடு உள்ளூராட்சி சபை சட்டத்தில் காணப்படுகிறது.

மணிவண்ணன் சமர்ப்பித்த 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எழு மேலதிக வாக்குகளால் 2022 டிசம்பர் 21ம் திகதி தோற்கடிக்கப்பட்டது. இந்நிலையில் ஒன்பது நாட்களுக்கு பின்னர் இரண்டாவது தடவையாக வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்க வாய்ப்பிருந்த போதும் சமர்ப்பிக்கமால் மணிவண்ணன் இராஜினாமா செய்தார்.

யாழ் மாநகர சபையின் முதல்வராக ஐனவரி 20ம் திகதி முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டார்.

அதன் பின்னர் பெப்ரவரி 14ம் திகதி ஆர்னோல்ட் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் 8 மேலதிக  வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதுடன் இரண்டாவது தடவையாக சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டமும் தோற்கடிக்கப்பட்டது.

இந்நிலையில் யாழ் மாநகர சபை கலையுமா? அல்லது மீண்டும் யாழ் மாநகர சபை முதல்வர் தெரிவு இடம்பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கான பதில் வர்த்தமானி வெளியான பின்னர் கிடைத்துவிடும்.

எது எப்படியோ மார்ச் 19ம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து உள்ளூராட்சி சபைகளின் காலமும் முடிவடைகிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்