day, 00 month 0000

பொலிஸ் மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள உத்தரவு

தேசிய மக்கள் சக்தி நேற்று (26) முன்னெடுத்திருந்த எதிர்ப்பு பேரணியின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசி தாக்குதல் மேற்கொண்டதில் 28 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையை 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யூனியன் பிளேஸ் பகுதியில் இந்த பேரணி இடம்பெறும் போது, ​​அப்பகுதிக்கு எதிர்ப்பு பேரணிகளை நடாத்த தடைவிதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்காத நிலையில் இவ்வாறு நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்