day, 00 month 0000

தேர்தலுக்கான நிதியை நிறுத்தும் அரசின் தீர்மானம் நியாயமற்றது - இலங்கை திருச்சபை அறிக்கை

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியுதவியை நிறுத்தும் அரசின் தீர்மானம் நியாயமற்றது எனவும், தன்னிச்சையானது எனவும், நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இலங்கை திருச்சபை தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு  முன்னர் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொழுதுபோக்கு காரியங்களை நடத்திய அரசுக்கு தேர்தல் நிதியை நிறுத்த எந்தத் தார்மீக உரிமையும் இல்லை எனவும் இலங்கை திருச்சபையின் தலைமை பேராயர் துஷாந்த ரொட்ரிகோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளின் கடன்களை மீளச் செலுத்தத் தவறிய பிறகும், தேர்தலுக்கு நிதியளிக்க முடியவில்லை என்று கூறும் எந்தவொரு அரசும் பதவியில் நீடிக்க சட்டபூர்வமான அதிகாரம் இல்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்