day, 00 month 0000

குல்லா போட்டு மக்களை ஏமாற்றிய இந்திய கூலிப்படைகளுக்கு ஆப்பு வைத்த ரணில்

இலங்கையின் சுதந்திர தினத்தன்று குல்லா அணிந்து எதிர்ப்பு காட்டுவதாக மக்களை ஏமாற்றிவிட்டு பின்னர் ரணிலுடன் ஒட்டி உறவாடிய இந்திய கூலிப்படைகளுக்கு ரணில் ஆப்பு வைத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அதாவது 13ஆவது திருத்ததை தருவார் என்று நம்பியிருந்த இந்திய கூலிப்படைகளுக்கு மாவட்ட சபைகளையே தரமுடியும் என கூறி ரணில் ஆப்பு வைத்துள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் உரையாற்றும் போதே கஜேந்திரகுமார் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

கடந்த 8ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்க உரையில் ரணில் 13ஆ திருத்தம் பற்றியோ மாகாணசபை பற்றியே ஒரு வார்த்தை கூட இல்லை. மாறாக மாவட்ட அபிவிருத்தி சபை பற்றி அறிவித்தார்.

இந்த ரணில் தான் தமிழீழ தேசத்துக்கு உரிமை கொடுக்க இருந்தவராம். இவரை பகிஸ்கரித்தது நாங்கள் செய்த அநியாயமாம்.

இந்தளவுக்கு ஒரு கேவலம் கெட்ட தலைமைத்துவத்தை வைத்துதான் நாங்கள் எப்போவே அழிந்திருக்க வேண்டியது. இந்த தலைவர்கள் எப்போதோ அழித்திருப்பர். இன்று கோவணம் அறுந்து போயிருக்கிறது. ரணில் தன்னுடைய உண்மையான முகத்தை காட்டியுள்ளார்.

குல்லா போட்டு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு யாழில் ரணிலுடன் சொந்தம் கொண்டாடினர். 

சிறிலங்கா சுதந்திர தினத்துக்கு காலை சாப்பிடதை மத்தியானம் மறந்துவிடுகின்ற கும்பல்தான் இவர்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஸ்தாபிக்கப்பட்ட நாளில் இருந்து மக்களுக்கு தெளிவான செய்தியை சொல்லிவருகின்றோம். காலத்துக்கு காலம் மாற்றப்படுகின்ற செய்தி அல்ல.

தமிழ் தேசிய தவைலரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து என்றைக்கு விலகவேண்டி வந்ததோ. அதற்கான காரணங்கள் அன்று தொடக்கம் இற்றைவரைக்கும் மாறாமல் ஒரே ஒரு விடயமாகத்தான் இருக்கின்றது.

கூட்டமைப்பு மைத்திரி ரணிலுடன் சேர்ந்து தயாரித்த 2015 ஆரம்பித்து 2017 செப்டெம்பர் வெளியிட்ட அந்த இடைக்கால அறிக்கை சிங்களத்திலே மிகத் தெளிவாக இலங்கை ஏக்கிய ராச்சிய, ஒற்றையாட்சி என்று பதிவு செய்யப்பட்டது.

தமிழில் ஒருமித்த நாடு என்ற பூச்சாண்டியை காட்டி தமிழ் மக்களே விரும்பி ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ளவைக்கும் சதி 2018 நடந்த உள்ளூராட்சி தேர்தலிலே மக்களிடம் ஒற்றையாட்சிக்கான ஆணையைக் கேட்டுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்டது. அதில் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தியிருந்ததாக கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்