day, 00 month 0000

13 க்கு ஆளும்கட்சி உறுதியளிக்கவில்லை

13 ஆவது திருத்தத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஆளும்கட்சி மக்களுக்கு வாக்குறுதி வழங்கவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கே முழுமையான ஆதரவு வழங்குவோம் என்பதனால் அது குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியால் தனித்து எவ்வித தீர்மானமும் எடுக்க முடியாது என்றும் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டார். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்