day, 00 month 0000

விடுதலைப்புலிகளின் தலைவரின் உடலை டி.என்.ஏ பரிசோதனையை நிரூபிக்க முடியுமா?

தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று இலங்கை இராணுவம் அறிவித்த போது டி.என்.ஏ பரிசோதனை மூலம் அதனை நிரூபிக்குமாறு நான் கோரியிருந்தேன் என தமிழத் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.  

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்று உலக தமிழர் பேரமைப்பின் தலைவர்  பழ.நெடுமாறன் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பழ.நெடுமாறனின் அறிவிப்பு குறித்து சிவாஜிலிங்கம் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற ஒரு செய்தியை தஞ்சாவூரில் வைத்து  பழ.நெடுமாறன் கூறியதாக ஊடகங்கள் மூலமாக நான் அறிந்து கொண்டேன்.

தமிழர் தேசிய தலைவர் கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசாங்கம் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி அறிவித்து, அவரது உடலையும் காட்டியபோது கூட, உடனடியாகவே நாம், அதாவது மே 20ஆம் திகதி சென்னையில் பழ.நெடுமாறன் தலைமையில் ஊர்வலத்தை நடத்தினோம். அதில் ம.தி.மு.க. நிறுவுனர் தலைவர் வைகோ, பா.ம.க. நிறுவுனர் டாக்டர் ராமதாஸ், நான் உட்பட பலர் கலந்து கொண்டோம்.

அந்த பேரணியில் வைத்து நான் கூறியிருந்தேன், இது அவருடைய உடல் அல்ல என்று உறுதிப்படத் தெரிவித்திருந்தது மாத்திரமல்ல, முடிந்தால் டி.என்.ஏ பரிசோதனை மூலம் நிரூபிக்குமாறு இலங்கை அரசுக்கு சவால் விடுத்திருந்தேன். இதே கருத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றத்திலும் ஊடகச் சந்திப்பிலும் கூறியிருந்தேன்.

பல தடவைகள் மீண்டும் மீண்டும் கூறிவிட்டேன். டி.என்.ஏ பரிசோதனையை முடிந்தால் செய்யுங்கள் அல்லது மரண சான்றிதழை வழங்குங்கள் என்று தெரிவித்தேன். ஆனால் இலங்கை அரசு அதைச் செய்யவில்லை.

இந்தியாவிலே தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு வழக்குக்காக தேடப்படுகின்றார் என்றால் அதற்கு ஒரு மரண சான்றிதழை கூட இலங்கை அரசாங்கத்தால் வழங்கமுடியவில்லை என்றால் அதனுடைய பின்னணி என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்