day, 00 month 0000

விடுவிக்கப்பட்டது வலி. வடக்கின் 108 ஏக்கர் காணி

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் 1990 ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக சென்றிருந்தனர்.

தற்போது 22 வருடங்களுக்கு மேலாக தற்காலிக அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.  அவ்வாறு இடம் பெயார்ந்த மக்களின் வீட்டுக்காணிகள், தோட்டக்காணிகள், வயல் நிலங்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் கைப்பறியிருந்ததுடன் குறித்த காணிகளை விடுவிக்கக்கோரி வலிகாமம் வடக்கு பகுதியை சேர்ந்த மக்கள் பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

அதற்கமைய காங்கேசன்துறை - மத்தி ஜே 234/ மயிலிட்டி - வடக்கு ஜே 246/ தென்மயிலை ஜே 240/ பலாலி - வடக்கு ஜே 254/ நகுலேஷ்வரம் ஜே 226 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 80 ஏக்கர் காணியும், கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த 28 ஏக்கர் காணியுமாக 108 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் யாழ்.வலி வடக்கில் பாதுகாப்பு படையினரின் கைவசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுகிறது.  யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினர் வசமிருந்த சுமார் 108 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, இன்று 197 குடும்பங்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இராணுவத்தினர் வசமிருந்த ஐந்து காணிகளும் கடற்படையினர் வசமிருந்த ஒரு காணியுமே இவ்வாறு மக்களிடம் கையளிக்கப்பட உள்ளது. இம்மாதம் பெப்ரவரி 4ஆம் திகதி சிறிலங்காவின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வடக்கிலுள்ள காணிகளை விடுவித்து அவற்றை உரிமையாளர்களிடம் கையளிப்பதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பாதுகாப்புத் துறையின் முழு கண்காணிப்புடன் இந்த காணி விடுவிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்காக காணி உரிமையாளர்கள் வெளிப்படைத்தன்மையுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், யுத்தத்தினால் இடம்பெயர்ந்து தொடர்ந்தும் பருத்தித்துறையிலுள்ள 09 முகாம்களில் தங்கியுள்ள 75 குடும்பங்களுக்கு பலாலி வடக்கு பிரதேசத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான சுமார் 13 ஏக்கர் காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

இவ்வாறு விடுவிக்கப்படும் காணியில் அமைந்துள்ள நகர மண்டபம், அன்றைய தினமே வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் கையளிக்கப்படவுள்ளது. இதேவேளை, மீளக்குடியமர்த்தப்படும் 197 குடும்பங்களுக்கு, மீள்குடியமர்வுக்கு அவசியமான உதவித் தொகையையும் உடனடியாக வழங்குமாறும் அதிபர் ரணில் விக்ரமசிங்க மீள்குடியேற்றத்துக்குப் பொறுப்பான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்