day, 00 month 0000

இனப்பிரச்சினைக்கான தீர்வு; மிலிந்த மொரகொடவை சந்தித்த ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் சிறிலங்கா விஜயத்தின் போது இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், இந்தியாவிற்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவை ஜெய்சங்கர் சந்தித்து சிறிலங்கா அரசாங்கத்தின் புரிந்துணர்வு தொடர்பில் கேட்டறிந்துகொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

இந்தியாவிற்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் மற்றும் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது ஜெய்சங்கரின் சமீபத்திய சிறிலங்காவிற்கான விஜயத்தின் நோக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி சிறிலங்காவிற்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கையிலுள்ள இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் வகையில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியிருந்தார்.

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் வலியுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்