day, 00 month 0000

வளி மாசடைதல் மீண்டும் அதிகரித்துள்ளது-தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம்

நாட்டின் பல நகரங்களில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் சரத் பிரேமசிறி தெரிவிக்கையில், பல நகரங்களில் காற்றின் தரம் 100 முதல் 150 வரை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்நிலை அடுத்த சில தினங்களிலும் தொடரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிலை எதிர்வரும் மார்ச் மாதம் வரை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தொடரலாம்.

எனவே முகக்கவசத்தை அணிவதன் மூலம் நச்சு வாயு பாதிப்பை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்