// print_r($new['title']); ?>
day, 00 month 0000

13 ஐ அமுலாக்கியே தீருவேன்; ரணில் சபதம்

13ஆம் திருத்தச்சட்டம் அரசியல் யாப்பில் உள்ளது. அது யாப்பில் இருக்கும் போது அதனை அமுலாக்காமல் இருப்பது முறையில்லை. அதனை அமுலாக்க கூடாது என்றால் பாராளுமன்றில் விசேட பிரேரணை ஒன்றை கொண்டுவந்து அதனை இல்லாதொழிக்க வேண்டும்.அதனை விடுத்து அரசியல் யாப்பில் இருக்கின்ற ஒன்றை அமுல்படுத்தக் கூடாது என்று என்மீது கூச்சல் எழுப்பக்கூடாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி கூட்டம் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய போதே  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

நான் மக்களால் தெரிவுசெய்யப்படவில்லை என்றாலும், மக்கள் பிரதிநிதிகளால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி. 

எனக்கு நிறைவேற்றதிகாரம் உள்ளது. அதன்கீழ் அரசியல் யாப்பில் இருக்கின்ற விடயங்களை அமுலாக்குவேன்.

இலங்கையில் மாகாண சபைகளுக்கு, லண்டன் நகரசபைகளுக்கு இருக்கும் அதிகாரங்கள் கூட இல்லை.அதிகாரப்பகிர்வை வழங்குவதால் நாடு பிளவுபட்டுவிடாது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்