// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் முழு பலத்தையும் பயன்படுத்தும்

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் முழு பலத்தையும் பயன்படுத்தும் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டி முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி எம்பி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த ஒற்றுமை நடைபயணம் தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது, ஏராளமானோர் கூடி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும், ராகுல் காந்தியின் யாத்திரையில் இணைந்து அவர்களும் நடைபயணம் மேற்கொண்டனர்.  இந்நிலையில் ஜம்மு நகரின் சத்வாரி என்ற இடத்தில் இன்று தனது நடைபயணத்தை மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பதுதான் இம்மாநில மக்களின் மிகப் பெரிய கோரிக்கை. மாநில அந்தஸ்து விவகாரத்தைவிட பெரிய விவகாரம் வேறு இல்லை. உங்கள் உரிமை உங்களிடம் இருந்து பறிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் கட்சி உங்களுக்கு ஆதரவாக இருக்கும். நாங்கள் எங்கள் அனைத்து பலத்தையும் இதற்காகப் பயன்படுத்துவோம். தங்களின் கோரிக்கையை ஆட்சியாளர்கள் கேட்பதில்லை என்ற வேதனையை ஜம்மு காஷ்மீர் மக்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டனர்.

ஜம்மு காஷ்மீரில் தற்போது வர்த்தகம் அனைத்தும் வெளியாட்களின் கைகளுக்குச் சென்று விட்டது. இம்மாநில மக்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் வேலைவாய்ப்பின்மை மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு முன், ராணுவம் அதிக வேலைவாய்ப்பை வழங்கி வந்தது. தற்போது, அக்னிவீரர் என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டத்தால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு ராணுவத்திலும் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை” என கூறினார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்