// print_r($new['title']); ?>
day, 00 month 0000

பிள்ளையான் மீதும் தடை; கனடாவிடம் விடுக்கப்படவுள்ள கோரிக்கை

கனேடிய தமிழ் அமைப்புகள் பிள்ளையான் மீதும் பயணத்தடையை விதிக்குமாறு கனேடிய அரசாங்கத்தை கேட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கனேடிய அரசாங்கம் ராஜபக்ச சகோதரர்கள் மீது விதித்த பயணத்தடையை கனேடிய தமிழ் அமைப்புகள் வரவேற்றுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், சமூகசேவையாளர்கள், அரசியல்பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பல பொதுமக்களின் கொலைக்குக் காரணமான பிள்ளையான் மீது கடுமையான தடைகளை கனடா விரைவில் அறிவிக்க வேண்டும் என்பதற்கமைய தாம் செயற்படுவதாக கனேடிய தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கனேடிய தமிழ் அமைப்புகள் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளன.

மேலும் ஐரோப்பிய அவுஸ்திரேலிய அரசுகளிடமும் பிள்ளையான் மீதான பயணத்தடையை விதிக்குமாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளன.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தகவல்களும் தமது மனுக்களில் இணைக்கப்பட ஆராய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பிள்ளையானின் சகாக்களின் தகவல்களும் இணைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பிள்ளையானின் சகாக்களின் தகவல்களும் இணைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஜனவரி 29ம் திகதியில் இருந்து நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி 29ம் திகதியில் இருந்து நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்