// print_r($new['title']); ?>
day, 00 month 0000

"சிங்கள ஆட்சியர்களிடம் தமிழீழத்தை ஏலம் போடுவது போன்று சந்திப்பு அமைந்துவிடக்கூடாது"

இறையாண்மை கொண்ட தமிழீழ விடுதலை ஒன்றே தமிழ் மக்களைக் காப்பாற்றக்கூடிய நியாயமான தீர்வாகும் என ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் சார்பில் அவர் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஆட்சியாளர்களிடம் பேசப் போகிறவர்களுக்கு நெருப்போடு விளையாடாதீர்கள் என்றே கூறுவேன்.

இனவெறிச் சிங்கள ஆட்சியர்களிடம் தமிழீழத்தை ஏலம் போடுவது போன்று, உங்களின் சந்திப்பு அமைந்துவிடக்கூடாது என்றும் காசி ஆனந்தன் தமிழ் தலைமைகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

முண்டியடித்துக் கொண்டு சிங்கள இன வெறி ஆட்சியாளர்களோடு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளச் செல்லுகின்ற நாடாளுமன்றத் தலைமைகள் இடைக்கால தீர்வினையே பெறப்போகிறோம் என்று அறிவிக்கவேண்டும். 

குறிப்பாக இந்த பேச்சுவார்த்தையின் மூலம் கிடைக்கின்ற தீர்வு  நிரந்தரத் தீர்வு அல்ல என்பதையும் அவர்கள் மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்றும் காசி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.

சங்கிலியனும், பண்டார வன்னியனும், குளக்கோட்டனும், உலக நாச்சியாரும் ஆண்ட தமிழீழ மண்ணை சிங்கள இனவெறி அரசோடு ஒப்பந்தம் செய்து தமிழனின் சரித்திரத்தில் மண் போடாதீர்கள்.

அத்துடன் இடையில் நீங்கள் நடத்த இருக்கும் உங்கள் பேச்சுவார்த்தையில் கூட எங்கள் தாயகம் தாக்கப்பட்டு விடக்கூடாது  என்பதே எங்கள் கவலை என்றும் வலியுறுத்துகின்றேன்.

ஈழம் தனிநாடு என்பதையும் தனி அரசு என்பதையும் காலம் உறுதி செய்யும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்