// print_r($new['title']); ?>
day, 00 month 0000

தமிழரசு கட்சியின் தீர்மானம் இறுதி முடிவு அல்ல

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் பிரதேச சபை தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டும் என தெரிவித்திருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி தலைவர்களுடன் பேசியே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தமிழரசு கட்சியினுடைய மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் இறுதி முடிவா என  அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில், 

நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் கூடிய தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இடம்பெற்றது.

அதில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பிரதேச சபை தேர்தலில் தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தார்கள்.

இது தமிழரசு கட்சியின் உடைய விருப்பமாக மத்திய குழுவில் முன் வைக்கப்பட்ட  நிலையில் எதிர்வரும் வாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பங்காளி கட்சிகள் உடைய தலைவர்களை கொழும்பில் சந்தித்து கலந்துரையாட உள்ளோம்.

ஆகவே கட்சித் தலைவர்களின் கலந்துரையாடலின்  பின்னர் தீர்க்கமான இறுதி முடிவை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்