// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கையை கூட அசைக்க முடியாத நிலையில் விஜயகாந்த்; சக்கர நாற்காலியில் மக்கள் முன் தோற்றம்

நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியே வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை பார்த்து கையசைத்ததோடு வெற்றி குறி காட்டினார்.

ஆனால் கையை அசைக்க முடியாமல் அவதிப்பட்ட அவரை பார்த்த பல தொண்டர்கள், திரைப்படங்களை வில்லனை மாறி மாறி பந்தாடி பக்கம் பக்கமாக வீர வசனம் பேசிய எங்கள் கேப்டனா இது என கண்ணீர் விட்டனர்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இதற்கிடையே நீரிழிவு நோய் காரணமாக கடந்த ஆண்டு அவரது வலது கால் விரல்கள் அகற்றப்பட்டன.

மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த அவர் தற்போது நல்ல நலமுடன் உள்ளார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிசிச்சை முடிந்து சில நாட்களிலேயே விஜயகாந்த் வீடு திரும்பினார். இதனையடுத்து அவர் பூரண நலம்பெற வேண்டி அவரது ரசிகர்களும், கட்சியினர், அரசியல் திரையுலக பிரபலங்களும் பிரார்த்தனை மேற்கொண்டதோடு, விரைவில் நலம்பெற வேண்டும் என வாழ்த்துகளை கூறினர்.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் புத்தாண்டையொட்டி, தொண்டர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்தும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகாலை முதலே தலைமை அலுவலகத்துக்கு வரத் தொடங்கினர். பகல் 12 மணி அளவில் விஜயகாந்த் வந்தார். வெள்ளை பேண்ட் சட்டையில், கண்ணாடி, முகக் கவசம் அணிந்தபடி வீல் சேரில் அமர வைத்து அவரை மகனும், நிர்வாகிகளும் அழைத்து வந்துள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் தலைவனைப் பார்த்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அலுவலகத்தின் முகப்பு பகுதியில் அமர்ந்து, தொண்டர்களை பார்த்து கையசைத்த விஜயகாந்த், பின்னர் கைகூப்பி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார்.

சுமார் 10 நிமிடங்களுக்கு தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த், பின்னர் அவரை அவரது மகன் உள்ளே அழைத்துச் சென்றார். அப்போது அங்கிருந்த தேமுதிக தொண்டர்கள் கேப்டன் கேப்டன் என உற்சாகம் முழக்கமிட்டனர்.

பல நாட்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் விஜயகாந்த் வீட்டிலேயே இருந்த நிலையில் இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியே வந்த அவர் தொண்டர்களை பார்த்து கையசைத்ததோடு வெற்றி குறி காட்டினார். அப்போது கூட்டத்தில் இருந்த பல தொண்டர்கள் திரைப்படங்களை வில்லனை மாறி மாறி பந்தாடி பக்கம் பக்கமாக வீர வசனம் பேசிய எங்கள் கேப்டனா இது என கண்ணீர் விட்டனர். குறிப்பாக தொண்டர்களுக்கு வெற்றிக் குறி காட்டுவதற்கு, கையெடுத்துக் கும்பிடுவதற்கும் கூட அவரால் முடியவில்லை.

திரைப்படங்களில் வீர வசனம் பேசி, அரசியல் மேடைகளில் கையை நீட்டி அனல் பறக்கும் வகையில் அரசியல் புயலாய் வீசிய விஜயகாந்த் தொண்டர்கள் முன்னால் கையெடுத்து கும்பிட கூட முடியாமல் அமர்ந்திருந்த நிலையில் அருகில் இருந்த நிர்வாகிகள் அவரது இரு கைகளையும் பிடித்து வணக்கம் போட வைத்தனர்.

அப்போது எதிரே திரண்டிருந்த தொண்டர்கள் உணர்ச்சி பெருக்கை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த புத்தாண்டில் பழைய பன்னீர்செல்வமாய் கேப்டன் விஜயகாந்த் திரும்ப வர வேண்டும் எனவும் தொண்டர்கள் வேண்டிக் கொண்டனர். தொண்டர்களை பார்த்து விஜயகாந்த் வணக்கம் செய்த காட்சியும் தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்ட காட்சிகளும் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்