day, 00 month 0000

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு!

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தின் 10வது நாள் போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது,

முதலாம் திகதி மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

“கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப்பொருளில், வடக்கு கிழக்கு உட்பட 8 மாவட்டங்களில் சுழற்சி முறையில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது,

இன்றைய போராட்டத்தில் கிராம அடிப்படை அமைப்புக்கள், விவசாய, மீனவ சங்கங்கள், பெண்கள் மற்றம் மாணவர் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்