இலங்கை மற்றும் இந்திய அணிகள் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்த நிலையில் இந்தியா அணிக்கெதிரான தொடருக்கான இலங்கை அணி 16 பேர் கொண்ட குழாமில் தமிழ் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந் இணையும் வாய்ப்புள்ளது.
நடந்து முடிந்த LPL – Lanka Premier League தொடரில் Jaffna Kings அணிக்காக விளையாடி 8 போட்டியில் 13 விக்கெட்டினை வீழ்த்தி அசத்தினார் விஜயகாந்த் வியாஸ்காந்.
இதனால் தேசிய அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்தை 16 பேர் கொண்ட அணிகுழாமில் இணைக்க ஏற்பாடு இடம் பெற்று வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.