// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இலங்கை முன்னேறாது- இலங்கை அமைச்சருக்கு முகத்துக்கு நேரே கூறிய வெளிநாட்டு அதிகாரி

” 9 மணிக்கு கூட்டம் எனக்கூறிவிட்டு, அதை 9.30 மணிக்கு நடத்துவதுகூட பொய்யாகும். பொய்யென்பது இலங்கையின் கலாச்சாரமாக மாறியுள்ளமை கவலைக்குரிய விடயமாகும். இப்படி இருந்தால் முன்னேற முடியாது.”

இவ்வாறு இலங்கை அமைச்சர் உட்பட அதிகாரிகளை நேரில் விமர்சித்துள்ளார் தென்கொரிய அதிகாரியொருவர்.

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவிகளை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று சமூக வலுவூட்டல் அமைச்சில் இடம்பெற்றது. இதில் தென் கொரிய இடர் உதவி நிதியத்தின் தலைவர் சூ சோ லீ பங்கேற்றிருந்தார். சென்றுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டம் சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக ஆரம்பமாகியுள்ளது. இதன் காரணமாக தென் கொரிய இடர் உதவி நிதியத்தின் தலைவர் சூ சோ லீ, ராஜாங்க அமைச்சர் உட்பட அதிகாரிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

” எமக்கு ஒரு பொறுப்பை வழங்கினால், அர்ப்பணிப்புடன் அதனை செய்ய வேண்டும்.

இலங்கை அரச அதிகாரிகள் மன்னர்களை போல் இருக்கின்றனர். இந்த நாட்டின் மனோபாவம் மாற வேண்டும்.இதற்காக நாட்டில் கல்வி முறை முற்றாக மாற்றப்பட வேண்டும். இலங்கையின் கல்வி முறை மற்றும் மக்களின் எண்ணங்கள் மாற்றமடைய வேண்டும்.” – எனவும் அவர் எடுத்துரைத்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்