day, 00 month 0000

யஸ்மின் சூக்காவிடம் பகிரங்க மன்னிப்பை கோரியுள்ள கோத்தாவின் சகா

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் கட்சியினது, இங்கிலாந்து பிரதிநிதியான ஜெயராஜ் பலிஹவடன, தென்னாபிரிக்காவின் மனித உரிமைகள் சட்டத்தரணியும், செயற்பாட்டாளருமான யஸ்மின் சூக்காவிடம் பகிரங்க மன்னிப்பை கோரியுள்ளார்.

இங்கிலாந்து நீதிமன்றம் ஒன்றில் வைத்தே அவர் இந்த மன்னிப்பை கோரியுள்ளார்.

ஜெயராஜ் பலிஹவடன, சூகாவுக்கு எதிராக குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியிருந்தார்.
அதில் சூக்கா தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுவுக்கு சார்புடையவர் என்ற குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருந்தார்.

அத்துடன் இந்தக்குற்றச்சாட்டின் பிரதிநிதிகளை ஜெனீவாவில் உள்ள 47 தூதரங்களுக்கும் அனுப்பியிருந்தார்.
இதனையடுத்து, தனது நற்பெயருக்குக் கேடு விளைவிக்கும் தவறான தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டதாக கூறி, ஜெயராஜ் பலிஹவடனவுக்கு எதிராக, யஸ்மின் சூக்கா மனுத்தாக்கல் செய்திருந்தார்
இந்தநிலையில் அந்த அறிக்கைக்காக ஜெயராஜ், சூக்காவிடம் நீதிமன்றில் மன்னிப்பைக் கோரியுள்ளார்.
அத்துடன் இந்த மன்னிப்புக் கோரலை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையத்தில் வெளியிடவும் அவர் இங்கிலாந்து நீதிமன்றில் இணக்கம் வெளியிட்டுள்ளார்.

விசாரணைகளின்போது, இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் இலங்கையில் மனித உரிமைப் பாதுகாவலராக தாம், பணியாற்றியதால், தம்மை இழிவுபடுத்தும் ஒரு முயற்சியாக இது தோன்றுகிறது.

அதேநேரம் மனித உரிமைப் பாதுகாவலர்களை பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என்று கண்டனம் செய்வது உலகெங்கிலும் உள்ள அடக்குமுறை ஆட்சிகளின் நன்கு அணிந்திருக்கும் தந்திரம் என்றும் யஸ்மின் சூக்காவின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
எனினும் சட்டத்தரணியான பலிஹவடன, ஆரம்பத்தில் தமது கருத்துக்களை நீக்கவோ மன்னிப்பு கேட்கவோ தவறிவிட்டார், அதற்கு பதிலாக சூக்காவுக்கு எதிராக எதிர் மனுவைத் தாக்கல் செய்ய முயன்றார். எனினும் அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இறுதியில் அவர் கணிசமான சட்டச் செலவுகள் மற்றும் நஷ்டஈடுகளை சூக்காவிற்கு வழங்க ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல், அவரது கருத்துக்களை திரும்பப் பெறவும், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் மன்னிப்புக் கோரலை இணையத்தில்; வெளியிடவும் ஒப்புக்கொண்டார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்