உலகக்கிண்ண கால் இறுதி போட்டியில், இங்கிலாந்தும், பிரான்சும் மோதின. இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நகைச்சுவைத் தொனியில் மோதியுள்ளார்.
ஜனாதிபதி மக்ரோன் தனது டுவிட்டர் கணக்கில், “அன்புக்குரிய ரிஷி சுனக், இன்று இரவு போட்டியினை காண நான் ஆவலுடன் உள்ளேன். இந்த போட்டியில் பிரெஞ்சு அணி வெற்றி பெற்றால் (பிரெஞ்சு அணி தான் வெல்லும்) எங்களது அரை இறுதி போட்டிக்கு உங்களது வாழ்த்து இருக்குமா?!” என ரிஷி சுனக்கினை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
கேலி தொனியில் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு, பிரதமர் ரிஷி சுனக் பதிலளித்துள்ளார்.
“நாங்கள் செய்யவேண்டியதில்லை என நான் நம்புகிறேன். ஆனால் உங்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்த சுற்றில் நீங்கள் மூன்று சிங்கங்களுக்கு பின்னால் இருப்பீர்கள் என நான் நம்புகிறேன்!” என இங்கிலாந்து கொடியின் ஒட்டியுடன் (Stickers) பதிலளித்துள்ளார்.
இருவரது இந்த மோதலும் இணையத்தைக் கலக்கி வருகிறது.