day, 00 month 0000

அடுத்த வருட இறுதிக்குள் நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும்; ஜனாதிபதி

நாடாளுமன்றத்தை முற்றுகையிடாத வகையில் பாதுகாப்பினை வழங்கி, இராணுவம் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பெலவத்தை அகுரேகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு இன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதுடன், மக்களின் நம்பிக்கையினை வென்றெடுக்கும் வேலைத்திட்டத்தினை நாடாளுமன்ற உறுப்பினர்களே முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் நெருக்கடி நிலைமையில் இருந்து நாட்டை மீள கட்டியெழுப்புவதுடன், அடுத்த வருட இறுதிக்குள் நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்