day, 00 month 0000

வெளியேறியது பிரேஸில் - அரைஇறுதிக்குள் நுழைந்தது ஆர்ஜெண்டினா

 கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு குரோஷியா தகுதி பெற்றுள்ளது.

நேற்று(9) நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் பிரேஸிலை பெனல்டி முறையில் 4:2 கோல் விகிதத்தில் வென்றதன் மூலம் அரை இறுதிக்கு குரோஷியா தகுதி பெற்றது.

கத்தாரின் அல் ரையான் நகரிலுள்ள எடியூகேசன் அரங்கில் நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் நிர்ணியிக்கப்பட்ட 90 நிமிட ஆட்ட நேரத்தில் எந்த அணியும் கோல் புகுத்தவில்லை.

அதையடுத்து மேலதிக 30 நிமிட ஆட்ட நேரம் வழங்கப்பட்டது. மேலதிக நேர ஆட்டத்தில் இடைவேளைக்கு  அணித்தலைவர் நெய்மார் கோல் ஒன்றை புகுத்தினார்.  எனினும், 117 ஆவது நிமிடத்தில் குரோஷியாவின் புரூனோ பெட்கோவிச் புகுத்திய கோல் மூலம் கோல் எண்ணிக்கை சமப்படுத்தப்பட்டது. இதனால் மேலதிக நேர ஆட்டம் 1:1 விகித்தில் சமநிலையில் முடிவடைந்ததால் இரு அணிகளுக்கும் தலா 5 பெனல்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

இதில் குரோஷியா 4:2 விகிதத்தில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. குரோஷியா சார்பாக நிகேலா விலாசிக், லொவ்ரோ மேஜர், லூகா மெட்றிக், மிஸ்லாவ் ஓர்சிக் ஆகியோர் கோல்களைப் புகுத்தினர்.

இப்போட்டியில் புகுத்திய கோல் மூலம், சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த பேலேயின் சாதனையை நெய்மார் சமப்படுதினார். பேலே 92 போட்களில் 77 கோல்களைப் புகுத்தினார். நெய்மார் 124 போட்டிகளில் 77 கோல்களை புகுத்தியுள்ளார். 

உலக கோப்பை கால்பந்து போட்டியில்  இன்று(10) கத்தாரின் லுசைல் கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற மற்றுமொறு கால் இறுதிச்சுற்றில் ஆர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது.

பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜெண்டினா அணி வீரர் மொலினா 35-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை புகுத்தி அசத்தினார். இதன்மூலம் முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜெண்டினா அணி முன்னிலை வகித்தது.

இதனையடுத்து வெற்றிபெறும் கட்டாயத்தில் இறங்கிய இரு அணி வீரர்களும் கடுமையாக போராடினர். இந்த ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் லியோனர் மெஸ்ஸி அணிக்கான 2-வது கோலை பதிவு செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நெதர்லாந்து அணி வீரர் வெக்ஹோர்ஸ்ட் 83 மற்றும் 93+11 நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை புகுத்தி ஆர்ஜெண்டினா அணியின் வெற்றிக்கு முட்டுக் கட்டை போட்டார்.

இதனையடுத்து வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில் இரு அணிகளும் கோல் புகுத்த எடுத்துக் கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன.

மேலதிக நேரத்தின் முடிவில் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலை ஆனதால் முடிவை அறிய பெனால்டி முறை கடைபிடிக்கப்பட்டது.பெனால்டி முறையில் ஆர்ஜெண்டினா தனது முதல் 4 வாய்ப்புகளையும் கோலாக்கியது.

அதே சமயம் நெதர்லாந்து 4 வாய்ப்புகளில் 1-ஐ தவரவிட்டது. பரபரப்பான ஆட்ட முடிவில் ஆர்ஜெண்டினா 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது. 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்