day, 00 month 0000

ரொனால்டோவின் இடத்தை நிரப்பிய ராமோஸ்

கட்டார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் கால் இறுதிப் போட்டிக்கு மொரோக்கோ அணி தகுதிபெற்றுள்ளது. நேற்று(6) நடைபெற்ற 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் முன்னாள் சம்பியன் ஸ்பெய்னை பெனல்டி முறையில் 3:0 கோல்களால் மொரோக்கோ வென்றது.

இப்போட்டியின் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்ட நேரத்தில் எந்த அணியும் கோல் புகுத்தவில்லை. இதனால் மேலதிக 30 நிமிட ஆட்ட நேரம் வழங்கப்பட்டது. அதிலும் கோல் எதுவும் புகுத்தப்படவில்லை.

அதன்பின் தலா 5 பெனால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதில் 3:0 கோல்கள் விகிதத்தில் மொரோக்கோ அணி வெற்றி பெற்றது. மொரோக்கோ வீரர்களான அப்தெல்ஹமீத் சபிரி, ஹக்கீம் ஸியேச், அச்ரப் ஹக்கிமி ஆகியோர் பெனால்டி முறையில் கோல்களைப் புகுத்தினர்.

மொரோக்கோ கோல் காப்பாளர் யாசின் பவ்னோ சிறப்பாக செயற்பட்டு, ஸ்பானிய வீரர்கள் உதைத்த பந்துகளைத் தடுத்தார்.

உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் முதன்முறையாக மொரோக்கோ கால் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ஸ்பெய்ன் 2010 ஆம் ஆண்டில் உலகக்கிண்ணத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்து அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது போர்த்துகல் அணி. கட்டார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று(7) போர்த்துகல் - சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.

இப்போட்டியில் போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடவில்லை. அவருக்கு மாற்றாக, 21 வயது வீரர் கோன்கலோ ராமோஸ் அறிமுக வீரராக களம்கண்டார்.

ஆட்டம் ஆரம்பம் முதலே போர்த்துகல் வீரர்கள் வசம் இருந்தாலும், அறிமுக வீரர் ராமோஸ் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, போர்ச்சுகல்லின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்தார்.

ஆட்டத்தின் முதல் பாதியில் 17வது நிமிடத்தில் முதல் கோல் புகுத்தி கால்பந்து உலகில் ராமோஸ் தனது முத்திரையை பதிவு செய்தார். போர்த்துகல்லின் மற்றொரு வீரர் பெப் 33-வது நிமிடத்தில் ஒரு கோல் புகுத்தி 2-0 என சுவிட்சர்லாந்து அணிக்கு சவால் விடுத்தார்.

இரண்டாவது பாதியிலும் தொடர்ந்த போர்த்துகல்லின் ஆதிக்கத்தில் ராமோஸ் 51-வது நிமிடம் மற்றும் 67-வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் புகுத்தி அணிக்கு வலுசேர்த்தனர்.

அதேபோல், ரபேல் கியூரியோ 55-வது நிமிடத்திலும், பேல் லியோ 92-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் புகுத்தினர். சுவிட்சர்லாந்து சார்பில் 58வது நிமிடத்தில் மானுவல் அகாஞ்சி ஒரு கோல் அடித்தாலும் ஆட்ட நேரம் முடிந்தது. இதனால், இறுதியில், போர்த்துகல் 6-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

21 வயது வீரர் கோன்கலோ ராமோஸ் தனது அறிமுக போட்டியிலேயே ஹாட்ரிக் கோல் அடித்து உலக அரங்கில் அழுத்தமான வருகையை பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து சமூக ஊடகங்களில் அவர் கொண்டாடப்பட்டு வருகிறார். போர்த்துகல் ரசிகர்கள் அவரை தங்களின் “புதிய ஹீரோ” என்று வர்ணித்து வருகின்றனர்.

இதனிடையே, இந்த வெற்றியின் மூலம் அரையிறுதியில் மொராக்கோவை எதிர்கொள்ளவுள்ளது போர்த்துகல். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்