day, 00 month 0000

முதன்முறையாக ராஜபக்சவின் குடும்ப நிகழ்வில் ரணில்

வரலாற்றில் முதன்முறையாக டி.ஏ.ராஜபக்ஷ நினைவேந்தல் நிகழ்வில் ரணில் கலந்து கொண்டார். மறைந்த.டி.ஏ.ராஜபக்சவின் 55வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு நினைவேந்தல் உரை இன்று (24) பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது.

ராஜபக்ச ஞாபகார்த்த கல்வி, கலாசார மற்றும் சமூக சேவைகள் அறக்கட்டளையின் ஏற்பாட்டில், மினுவாங்கொட பட்டதுவன பிக்ஷு பயிற்சி நிறுவனத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாய அனுநாயக்க தேரர் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

மலேசியாவின் கோலாலம்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சமிதா ஹெட்டிகே, நிலையான வளர்ச்சிக்கான பாடங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நினைவேந்தல் உரை அடங்கிய புத்தகமும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மறைந்த டி.ஏ.ராஜபக்ஷவின் உருவச் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்