// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இங்கிலாந்து, பாகிஸ்தான் மோதும் டி 20 இறுதிப்போட்டி: இன்று மெல்போர்னில் பரபரப்பு

டி20 உலக கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ‘சூப்பர் 12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அரையிறுதியில் பலம் வாய்ந்த இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தேர்வானது. இதே போல அரைஇறுதியில் நியூசிலாந்து அணியை 152 ரன்னில் கட்டுப்படுத்திய பாகிஸ்தான் அணி 5 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டி இறுதிப்போட்டியில் நுழைந்தது.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் அந்நாட்டு ரசிகர்களிடையே யார் கோப்பையை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது. இதேபோல் 2010-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி மூன்றாவது முறையாக இறுதிபோட்டிக்குள் நுழைந்துள்ளது.

இரு அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்