day, 00 month 0000

தனுஷ்க குணதிலக்கவுக்கு 14 ஆண்டு காலசிறைத்தண்டனைக்கான வாய்ப்பு

அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.

பெண்ணொருவரின் விருப்பமின்றி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை உட்பட நான்கு பாலியல் குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிட்னி நகரிலுள்ள வீடொன்றில் வைத்து 29 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட 04 குற்றச்சாட்டுகள் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

இலங்கை அணியின் கிரிக்கெட் அணியின் வீரர்களுடன் 31 வயதான தனுஷ்க குணதிலக்க சசெக்ஸ் வீதியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது அவுஸ்திரேலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

சிட்னி நகரில் பெரமாடா நீதிமன்றம் குணதிலக்கவுக்கு பிணை வழங்க மறுத்துள்ளதுடன் நாளை தினம் அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்