// print_r($new['title']); ?>
day, 00 month 0000

விரைவில் ஜனாதிபதி தேர்தல்?

திடீர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்கட்சி பலவீனமாக உள்ளதால், தற்போதைய அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கும், அதனூடாக ஸ்திரமான ஆட்சியை நடத்துவதற்கும். ஜனாதிபதி ரணில் உத்தேசித்துள்ளதாக அறிய முடிகிறது.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுடன் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றார்.

உடனடி ஜனாதிபதி தேர்தல் ஒன்று வருமாயின் ரணிலை வேட்பாளராக நிறுத்தி அவரை வெற்றிபெறச் செய்ய ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூரத் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

இதேவேளை எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி அமைக்க கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்