day, 00 month 0000

மீண்டும் எரிபொருள் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு இதோ...

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் எரிபொருள் விலை குறைக்க தீர்மானித்துள்ளது. எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 40 ரூபாவாலும், ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலையை 15 ரூபாவாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெற்றோலின் புதிய விலையாக 370 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலையாக 415 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, சிபேட்கோ நிறுவனத்தின் விலை குறைப்புக்கு அமைய, தமது நிறுவனமும் எரிபொருளின் விலைகளை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்