// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இலங்கையை வீழ்த்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த நமிபியா !

ரி20 உலகக்கோப்பையின் முதல்போட்டியில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது நமிபியா. கீலாங், 16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13ந் திகதி வரை நடைபெறுகிது. 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

இந்நிலையில் டி20 உலக கோப்பையின் முதல் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் நமிபியா அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்துக்கான நாணய சுழற்சியில்  வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் களம் இறங்கிய நமிபியா அணியில் மைக்கேல் வான் லிங்கன் மற்றும் திவான் லா காக் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மைக்கேல் 3 ஓட்டம் , திவான் 9 ஓட்டம்  ஆட்டம் இழந்தனர். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டம்  சேர்த்தது.

அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் நமிபியா பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியை திணறடித்தனர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிசங்க 9 ஓட்டம் , குசல் மெண்டிஸ் 6 ஓட்டம்  ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த டி சில்வா 12 ஓட்டம் , குணதிலக்க ஓட்டம்  எதுவும் எடுக்காமலும், ராஜபக்ச 20 ஓட்டம் பெற்று  ஆட்டம் இழந்தார். நமிபியா பந்துவீச்சாளர்கள் மிகவும் கட்டு கோப்புடன் பந்து வீசினர். ஒரு புறம் எடுக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் திணற மறுபுறம் நமிபியா வீரர்கள் இலங்கையின் விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தினர். இறுதியில் அந்த அணி 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108  ஓட்டம் பெற்று ஆட்டம் இழந்து. இதன் மூலம் நமிபியா 55 ஓட்ட வித்தியாசத்தில் ஆசிய சாம்பியனை வீழ்த்தி வெற்றி பெற்றது. நமிபியா அணி தரப்பில் பெர்னார்ட், பென் ஷிகோங்கா, ஜான் பிரைலின்க், டேவிட் வைஸ் தலா 2 விக்கெட்டும், ஜே.ஜே.ஸ்மித் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். முதல்போட்டியில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்று நமிபியா அணி கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்