அதிக உணவு பணவீக்கம் காரணமாக கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழ்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக சிலர் வெளியூர்களுக்கு இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளுராட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சிலர் பயிரிடுவதற்காக வெளி மாகாணங்களில் இருந்து நிலத்தை வாங்க ஆசைப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனால், வெளி மாகாணங்களுக்கு இடம்பெயர்பவர்களில் பெரும்பாலானோர், நகர்ப்புறங்களில் விவசாயம் செய்ய இடமில்லாத சொத்துக்களில் வசிப்பவர்கள், சிலர் கொழும்பில் உள்ள வீடுகளை வாடகைக்கு விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, கொழும்பில் உணவுப்பணவீக்கம் 70 வீதமாக அதிகரித்துள்ளது. கொழும்பு சந்தையில் விறகுத் துண்டில் இருந்து சகல பொருட்களையும் கொள்வனவு செய்து கொழும்பில் வாழ்வது மிகவும் சிரமமாக உள்ளதாக வெளி மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களையே இந்தப் பிரச்சினை அதிகளவு பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.